

என்எஸ்இயின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஐடிஎப்சியின் விக்ரம் லிமயே நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இரு மாதங்களுக்கு முன்பு திடீரென ராஜிநாமா செய்ததால் தற்காலிக சிஇஒ நியமனம் செய்யப்பட்டார். இப்போது இயக்குநர் குழு விக்ரம் லிமயேவை நியமனம் செய்திருக்கிறது.
என்எஸ்இ தலைவர் அசோக் சாவ்லா தலைமையிலான நால்வர் குழு புதிய தலைமைச் செயல் அதிகாரியை தேர்ந்தெடுத்தது. இவரது நியமனத்துக்கு செபியின் அனுமதி தேவை.