

கிரண்ட்போஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தி லிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
நிறுவனத்தின் செயல்பாடுகளை மாற்றியமைத்ததுடன், செயல்பாட்டு லாபத்தை ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக உயர்த்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பல சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார். யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச நீராதார செயல்திட்டங்களின் வழக்கறிஞர்.
லீகோ நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றியவர். தலைமை சந்தையிடுதல் அதிகாரி, செயல் துணைத் தலைவர், நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
பாங் அண்ட் ஒலுஃப்சென் நிறுவனம், டுலிப் புட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக இருந்தவர். டானிஸ் கிரவுன் நிறுவனத்தில் தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
டென்மார்க்கில் உள்ள ஆர்கஸ் பல்கலைக் கழகத்தில் நிர்வாக மேலாண்மையியல் உயர்கல்வி முடித்தவர்.