

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் அதிகரித்து 61.75 ஆக இருந்தது.
அந்நிய முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாலும், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் டாலர் விற்பனை அதிகரித்துள்ளதாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ( புதன் கிழமை) சரிவுடன் துவங்கிய இந்திய ரூபாயின் மதிப்பு இறுதியில் ஏற்றத்துடன் முடிந்தது. இறுதியில் 31 காசுகள் ஏற்றம் கண்டு ரூ.62.05-ஆக முடிந்தது.