

அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் பணவீக்கம் 4.5 சதவீதமாக சரியும். அதனால் 0.50 சதவீதம் வரை வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக மார்கன் ஸ்டான்லி கணித்திருக் கிறது.
கமாடிட்டி விலை குறைவு, சம்பளம், நிதி கட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் பணவீக்கம் குறைவாக இருக்கும். அதனால் மார்ச் மாதத்துக்குள் 0.50 சதவீதம் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாக மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் நிதிக்கொள்கை முடிவு வெளியிடும் போது, பருவமழை நன்றாக இருந்து, பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் ஆண்டின் இறுதியில் வட்டி குறைப்பு செய்யப்படும் என்று ரகுராம்ராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.