

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 4.3 சதவீதம் அதிகரித்து 90 லட்சம் பைகளாக உயர்ந்துள்ளது. வியத்நாமிலிருந்து அதிக அளவில் காபி ஏற்றுமதியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 862 பைகள் ஏற்றுமதியானதாக உலக காபி ஏற்றுமதி வாரியம் (ஐசிஓ) தெரிவித்துள்ளது. ஒரு பை என்பது 60 கிலோ கொண்டதாகும்.
பிப்ரவரி மாதத்தில் வியத்நா மிலிருந்து அதிக அளவில் காபி ஏற்றுமதியாகியுள்ளது. இங்கி ருந்து மட்டும் ஏற்றுமதியாகும் அளவு 28 சதவீதம் அதிகரித்து 73 லட்சம் பைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
காபி ஏற்றுமதி ஆண்டு அக்டோபர் முதல் ஆரம்பமாகிறது. இந்த ஐந்து மாதங்களில் மிக அதிக அளவு வியத்நாமிலிருந்து ஏற்றுமதியாகியுள்ளது.
வியத்நாமுக்கு அடுத்தபடியாக பிரேஸில் அதிக அளவு காபி ஏற்றுமதி செய்கிறது. பிப்ரவரி மாதத்தில் 27 லட்சம் பைகள் ஏற்றுமதியாகியுள்ளது.
காபி ஏற்றுமதியில் இந்தோ னேசியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்தாலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இங்கிருந்து ஏற்றுதியாகும் காபி அளவு 71 ஆயிரம் பைகளாகக் குறைந் துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காபி அளவு 56 ஆயிரம் பைகளாகக் குறைந் துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 59 ஆயிரம் பைகள் ஏற்றுமதியானது.