ரூ. 50 ஆயிரம் கோடி ஏற்றுமதி இலக்கு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் நம்பிக்கை

ரூ. 50 ஆயிரம் கோடி ஏற்றுமதி இலக்கு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் நம்பிக்கை
Updated on
1 min read

அடுத்த மூன்று ஆண்டுகளில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ. 50 ஆயிரம் கோடியை எட்ட வேண்டும். இந்த இலக்கை எட்ட தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் களைந்து அனை வரும் பாடுபடவேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் கேட்டுக் கொண்டார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேலின் 27 ஆண்டு சேவையை பாராட்டி, தொழில் துறையினர் சார்பில் பாராட்டு விழா நேற்று முன் தினம் மாலை திருப்பூரில் நடந்தது.

சைமா தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சக்திவேல் பேசியதாவது:

அனைத்து உற்பத்தியாளர் களால்தான், இந்த அளவுக்கு என் னால் உயர முடிந்துள்ளது. 1973ம் ஆண்டு பனியன் தொழிலை ஆரம் பித்த எனக்கு, வர்த்தகம் முழு நோக்கமாக இருந்தாலும், 1983ம் ஆண்டில் என்னுடைய பொது வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

1984ம் ஆண்டு திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் ரூ.10 கோடியாக மட்டுமே இருந்தது. அந்த வர்த்தகம் 1990ம் ஆண்டு ரூ.250 கோடியாக மாறியது. இதற்கு தொழிற்சங்கங்களும் பெரும் உறுதுணையாக இருந்தன.

திருப்பூரில் உள்ள 650 சாய ஆலைகளுக்கும் 24 மணிநேரமும் தண்ணீர் கிடைப்பது மிகவும் ஆச் சரியம். திருப்பூரில் உள்ள அனைத்து சங்கத்தினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தற்போது ஆண் டுக்கு ரூ.25 ஆயிரம் கோடியாக இருக்கும் நமது ஏற்றுமதியை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியாக மாற்ற முடியும். தொழில்துறை, தொழிலாளர்களுக்கு என அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் ஜாப் ஒர்க் நிறுவனத்தினரும் ஏற்றுமதியாளர் களாக மாற வேண்டும். சேவை மட்டுமே வாழ்க்கை முழுவதும் பயணிக்கும் என்றார் சக்திவேல்.

இந்த விழாவில் என்.ஏ.பி. சங்க தலைவர் துரைசாமி, சைமா (கோவை) தலைவர் செந்தில்குமார், ஏ.பி.ஏ.டி. தலைவர் இளங்கோவன், பெடக்ஸ்சில் சேர்மன் துரைசாமி, பெஸ்ட் நிறுவனங்களின் சேர்மன் பெஸ்ட் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in