

ஜெர்மனியின் சொகுசுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மாண்ட்பிளாங் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இதே நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு நிர்வாகத் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2002-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ரிக்கிமோண்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சர்வதேச தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
இதே நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
1994-ம் ஆண்டிலிருந்து 1998-ம் ஆண்டு வரை கார்ட்டியர் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா பிரிவுக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.