மீரா சன்யால் - இவரைத் தெரியுமா?

மீரா சன்யால் - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ முன்னாள் வங்கியாளரான இவர், தற்போது தெற்கு மும்பை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

$ டந்த 2009-ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவிடம் தோற்றுப்போனார்.

$ ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் தலைவராக இருந்திருக்கிறார். மேலும் வங்கித்துறையில் 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர். Grindlays Bank, Lazards உள்ளிட்ட வங்கிகளிலும் பணியாற்றியிருக்கிறார்.

$ கொச்சியில் பிறந்த இவர் மும்பை, டெல்லி, கொல்கத்தா, பாரிஸ், பாஸ்டன் ஆகிய இடங்களில் கல்வி பயின்றவர். சி.ஏ. முடித்த இவர், INSEAD- ல் எம்.பி.ஏ. படித்தவர்.

$ ஃபிக்கி, சி.ஐ.ஐ. உள்ளிட்ட பல கூட்டமைப்புகளில் பல கொள்கை முடிவுகளை எடுத்தவர்.

$ இந்தியா முழுக்க இருக்கும் முக்கியமான கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்லூரி மாணவர்களிடம் உரையாடி இருக்கிறார். மேலும் 450க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in