

மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் டாடா இஎல்எக்ஸ்எஸ்ஐ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து பெங்களூருவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோ உள்ளிட்ட ஆராய்ச்சியில் இந்த மையம் ஈடுபடும். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தேவைகளுக்கேற்ற பொருள் வடிவமைப்பு, உற்பத்திக்கு ஏற்ற தயாரிப்புகளை இம்மையம் உருவாக்கும்.
இந்த மையம் இரு பகுதிகளைக் கொண்டதாயிருக்கும். அதாவது முதல் பிரிவானது வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஆய்வு செய் யும். இதற்கு ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் எனுமிடத்தில் உள்ள பானாசோனிக் ஆராய்ச்சி மையம் தேவையான உதவிகளை செய்யும்.
பெங்களூருவில் அமையும் ஆராய்ச்சி மையமானது பானா சோனிக் நிறுவனத்தின் இந்தியா, தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பொருள் தேவைக்கான வடிவ மைப்பு பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் இது நீண்ட கால உத்தி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பானா சோனிக் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் டெல்ஸுரோ ஹோமா தெரிவித்தார்.
புதிய பொருள் வடிவமைப்பு, உருவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்த ஆய்வு மையம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிறுவனத்தின் ஜஜ்ஜார் பிரிவானது ஆலை பொருள்களுக் கான வடிவமைப்பு, தர கட்டுப் பாடுடன் தயாரிக்கப்படும் அதாவது ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வற்றுக்கான பொருள்களை உருவாக்கும். இந்தப் பொருள் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ பயன்பாட்டை உருவாக்குவது இந்த மையத்தின் பிரதான பணியாக இருக்கும்.
இந்த மையத்தின் செயல் பாடுகளில் ஒருங்கிணைந்த வடிவமைப்பு, தொழில்நுட்ப சேவையை டாடா இஎல்எக்ஸ்எஸ்ஐ நிறுவனம் அளிக்கும்.