இணைய சம வாய்ப்பு: டிராய் முடிவுக்கு மார்க்சிஸ்ட் பாராட்டு

இணைய சம வாய்ப்பு: டிராய் முடிவுக்கு மார்க்சிஸ்ட் பாராட்டு
Updated on
1 min read

இணைய சம வாய்ப்பு தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுவாக பாராட்டியுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தை இத்துடன் விடப்போவதில்லை என்றும், தொடர் முயற்சிகளில் ஈடுபடப் போவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறியுள்ளார்.

இணையதளம் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதற்கு தடை விதித்து டிராய் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கருத்து கூறுகையில், இந்த முடிவு ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் இணைய வாய்ப்பு அளிப்பதில் உள்ள இடையூறுகளை அகற்றுவதில் தனது நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்டர்நெட்.ஓஆர்ஜி தளம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்று தனது முகநூலில் வெளியிட்டுள்ள கருத்து பரிமாற்ற செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய சமவாய்ப்பு தொடர்பாக டிராய் பிறப்பித்த உத்தரவுக்கு முதலில் கருத்து தெரிவித்துள்ளவர் மார்க் ஸக்கர்பெர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஃபேஸ்புக் வெளியிட்ட பிரீபேசிக்ஸ் திட்டம் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. இதனால் அனைவருக்கும் இணையதள வாய்ப்பு கிடைப்பது தடைபடும் என்று நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்தியாவின் தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வெளியிட்ட உத்தரவு மூலம் தகவல்களைப் பெறுவதற்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனக்கு விருப்பமான இணையதள சேவையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று ஸக்கர்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இத்தகைய தடை விதிக்கப்பட்டதன் மூலம் இன்டர்நெட்.ஓஆர்ஜி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

இன்டர்நெட்.ஓஆர்ஜி மூலம் பிற நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட எந்த வகையில் பயன்பட்டுள்ளது என்பதையும் ஸக்கர்பெர்க் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தியாவை இணைப்பது என்பது எங்களது பிரதான இலக்கு, இருப்பினும் அதிலிருந்து விலகமாட்டோம் ஏனெனில் 100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட இந்தியாவில் இன்னும் பலருக்கு இணையதள வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

இணையதளம் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதற்கு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இணையதளத்தின் அடிப்படைக் கோட்பாட்டில் இணைய சம வாய்ப்பு என்பதை கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக தேவையற்ற இதற்கு முன் எவருமே செய்திராத விளம்பர உத்தியைக் கையாண்டது. தங்களுக்கு சாதகமாக சில நிறுவனங்கள் மூலம் பொது மக்களிடம் கருத்தை திணிக்கப் பார்த்தது. ஆனால் அது ஈடேறவில்லை. இந்த விஷயத்தில் டிராய் எடுத்துள்ள முடிவு உறுதியானது. இணையதளம் பயன்படுத்துவோர் சார்பிலும், இணைய சமவாய்ப்பு தொடர போராடிய அனைவரது டிராய் முடிவை பாராட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in