

இன்ஃபோஸின் நிறுவனத்தின் தலைவர்களாக (president) பி.ஜி. ஸ்ரீனிவாஸ் மற்றும் யு.பி. பிரவீன் ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவர்கள் இவரும் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான எஸ்.டி. சிபுலாலுக்கு நேரடி தலைமையின் கீழ் செயல்பட வேண்டி இருக்கும்.
நிறுவனத்தின் மொத்த பிஸினஸையும் இரு பிரிவுகளாக பிரித்து இவர்கள் பொறுப்பில் ஓப்படைக்கப்பட்டிருக்கிறது. ஃபைனான்ஸியல் சர்வீசஸ், இன்ஷூரன்ஸ், உற்பத்தி துறை, என்ஜீனியரிங் சேவைகள், எனர்ஜீ, தொலை தொடர்புத்துறை,, இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ், இன்போசிஸ் லோட்ஸ்டோன் உள்ளிட்ட பிரிவுகள் பி.ஜி.ஸ்ரீனிவாஸ் கீழே இயங்கும்.
அதேபோல ரீடெய்ல், லாஜிக்ஸ்டிக்ஸ், லைஃப் சயின்ஸஸ், ரிசோர்சஸ், கிளவுட், மொபிலிட்டி, இன்ஃபோசிஸ் லீடர்ஷிப் இன்ஸ்டியூட் ஆகியவை பிரவீன் ராவ் தலைமையில் செயல்படும். மேலும் ஸ்ரீனிவாஸ் சர்வதேச சந்தைகளையும், ராவ் டெலிவரி மற்றும் சேவைகளில் கவனம் செலுத்த போவதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறாது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும், சேவைகளில் புதுமை புகுத்த முடியும் மேலும் எங்களுடைய சந்தை மதிபை அதிகப்படுத்த முடியும் என்று நிறுவனத்தின் சி.இ.ஓ. சிபுலால் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 8 முக்கியமான நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள். கடைசியாக டிசம்பர் 20-ம் தேதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.எஃப்.ஓ) வி.பாலகிருஷ்ணன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலைமையில் இவர்களது நியமனம் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போதைய சி.இ.ஓ.வான சிபுலால் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன் பிறகு இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் சி.இ.ஒ-வாக நியமிக்கபட வாய்ப்புகள் இருப்பதாக ஐ.டி.துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.