ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர்களுக்கு மாத ஊதியம் ரூ.4.5 லட்சம்

ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர்களுக்கு மாத ஊதியம் ரூ.4.5 லட்சம்
Updated on
1 min read

ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர்களுக்கு ஒட்டு மொத்த ஊதியம் மாதத்துக்கு ரூ. 4.5 லட்சமாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. செபி, டிராய் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் ஒட்டு மொத்த ஊதியமாக மாதத்துக்கு ரூ. 4.5 லட்சம் பெறுவார்கள். முழு நேர உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 4 லட்சமாக இருக்கும்.

ஏழாவது ஊதியக்குழு பரிந் துரையை நடைமுறைப்படுத்து வது குறித்து நிதியமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி இந்த தலைவர்களின் ஒட்டுமொத்த சம்பளம் 25 சதவீதம் அதிகரித்துள் ள து. அகவிலைப்படி 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவருக்கான ஒட்டுமொத்த ஊதியம் மாதத்துக்கு ரூ. 4.5 லட்சமாக ஊதியக் குழு பரிந்துரைத்துள் ள து. மத்திய மின் ஒழுங்குமுறை ஆணையம் (CERC), காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம், இந்திய நிறுவனங்களிடையே ஆரோக்கி யமான போட்டியை ஏற்படுத்தும் அமைப்பு (CCI) உள்ளிட்டவற்றுக் கான ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம், வேர் ஹவுஸ் மேம்பாடு மற்றும் ஒழுங் குமுறை ஆணையம், இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல அமைப் புகளின் தலைவர்களுக்கும் இதே அளவு ஊதிய விகிதம் இருக்கும்.

இந்த ஒன்பது கட்டுப்பாட்டு அமைப்புகளின் உறுப்பினர்க ளுக்கான ஒட்டுமொத்த ஊதிய விகிதம் மாதத்துக்கு ரூ. 4 லட்சமாக இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய பரிந்துரை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி துறை கட்டுப் பாடு அமைப்புகளுக்கு நடை முறைப்படுத்தப்படமாட்டாது என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in