

கடந்த 18 மாதங்களில் டிவிஎஸ் எக்ஸ்.எல்.100 வாகனம் 10 லட் சத்துக்கு மேல் விற்பனையாகி யுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.வைத்தியநாதன் கூறினார்.
கோவையில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: 1980-ம் ஆண்டு முதல் டிவிஎஸ் மொபெட்டுகள் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இதுவரை 1.2 கோடி வாகனங்கள் விற்பனை யாகியுள்ளன. மொபெட்டுகள் விற் பனையில் தமிழகத்தில் டிவிஎஸ் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.
கடந்த 2015 அக்டோபரில் 100சி.சி. திறன் கொண்ட டிவிஎஸ் எக்ஸ்.எல்.100 வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டது. இது 18 மாதங் களில் 10 லட்சத்துக்கும் மேல் விற் பனையாகியுள்ளது. ஏற்கெனவே சிவப்பு, கருப்பு, பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனம், தற்போது காப்பர் ஃஷைன், சில்வர் க்ரே ஆகிய வண்ணங்களிலும், டிவிஎஸ் எக்ஸ்.எல்.100 மற்றும் டிவிஎஸ் 100 கம்ஃபோர்ட் ஆகிய 2 மாடல்களிலும், பி.எஸ்.4 தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடனும் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.