

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவராக சுமித் சாஹ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இப்பொறுப்பை வகித்து வந்த மார்க் நாஸிப், இந்நிறுவனத்தின் சர்வதேச பிரிவில் வேறொரு முக்கிய பொறுப்புக்கு மாற்றப்படுவதைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்பை சுமித் ஏற்கிறார். புதிய நியமனம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொறுப்பேற்கும் சுமித், அன்றாட அலுவல் தொடர்பான விஷயங்களை ஆசிய பிராந்திய தலைவர் கில்ஸ் நார்மண்டிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.