Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இப்போதே மாற்றிக் கொள்ளலாம்



2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் வசதியைக் கருத்தி கொண்டு இப்போதுமுதலே வங்கிகளில்

ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு ஜூலை 1-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு. எனவே கள்ள நோட்டுக்களை கட்டுக்குள் கொண்டுவர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு சர்வதேச நடைமுறை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

2005-க்கு முன்பு வெளியான நோட்டுகளின் பின்பக்கத்தில் அச்சடிக் கப்பட்ட ஆண்டு விவரம் இருக்காது. 2005-க்கு பின் வெளியிடப்பட்ட நோட்டுகளின் பின்பக்கத்தில் கீழ்பகுதியின் நடுவில் சிறிய வடிவில் அச்சடிக்கப்பட்ட ஆண்டின் விவரம் இருக்கும். இதை வைத்து பழைய நோட்டுக்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x