Last Updated : 22 Feb, 2017 10:11 AM

 

Published : 22 Feb 2017 10:11 AM
Last Updated : 22 Feb 2017 10:11 AM

ஆன்லைனில் 5 ஆயிரம் பேரிடம் ரூ. 8 கோடி மோசடி மெடிகாம் நிறுவனர் உள்ளிட்ட 4 பேர் கைது

ஆன்லைனில் நூதன மோசடி திட்டம் மூலம் 5 ஆயிரம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த குற்றத் துக்காக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 8 மாதங்களில் 5 ஆயிரம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆன்லைனில் 4,866 முதலீட் டாளர்களிடம் அவர்கள் விரும்பும் விளம்பரங்களுக்கு மதிப்பெண் அளித்தால் அதற்கு ரொக்கத் தொகை அளிப்பதாகக் கூறி இத்தகைய மோசடியை நடத்தி யுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மெடிகாம் என்ற ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் இத்தகைய மோசடியை இவர்கள் செய்துள்ளனர். இது தொடர்பாக நிறுவன இயக்குநர்கள் தௌலத் சிங் ஷெகாவத் (22), பாரத் குமார் (27), நிறுவனத்தின் மேலாளர் ராம் குமார் சர்மா, நிறுவனத்தின் பங்குதாரரான அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனத்துக்கு இணைய தளத்தை வடிவமைத்துத் தந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட ஷெகாவத், பாரத் ஆகிய இருவரும் முதலில் தங்கள் பெயரில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பின் புலமாக அஜய் செயல்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வர்த்தகம் உள்ளிட்ட பணிகளை ராஜ்குமார் சர்மா மேற்கொண்டார். இவர்கள் நிறுவனத்துக்கு முன்மாதிரியான நிறுவனம் வெப் வொர்க் டிரேட் லிங்க் ஆகும். இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் சமீபத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது.

பாரத் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூனில் தங்கள் நிறுவன செயல்பாடுகளை இவர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இவர்களது நிறுவனம் மெடிகாம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்துக்காக ரூ. 5 லட்சம் செலவிட்டு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

நொய்டாவைச் சேர்ந்த நிறுவனத் தின் மோசடி சமீபத்தில் வெளியாகி அதன் நிறுவனர்கள் கைதானதைத் தொடர்ந்து இந்நிறுவன நிறுவனர் கள் நிறுவனத்தை மூடிவிட்டு வெளி நாட்டுக்கு தப்பிவிட திட்டமிட்டிருந் தனர். இவர்களது வங்கிக் கணக் கில் பிப்ரவரி 7-ம் தேதி வரை ரூ. 8 கோடி தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்ததாக குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப் பாளர் சுமித் குமார் தெரிவித் துள்ளார்.

முதலீட்டாளர்கள் அவர்களுக் கென்று தரப்படும் இணையதளத் தில் தோன்றும் விளம்பரங்களுக்கு ‘லைக்’ தெரிவிப்பதன் அடிப் படையில் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் போடப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவொரு விளம்பர நிறுவனத் தோடும் இந்நிறுவனத்துக்கு தொடர்பு கிடையாது என்றும் அவர் கூறினார்.

ராஜீவ் சவுக் பகுதியில் காரின் அருகில் நின்று கொண்டிருந்த ஷெகாவத், குமார், அஜய் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நான்காவதாக கைது செய்யப்பட்ட நபர் தப்பியோட முயன்ற போது அவரை போலீஸார் பிலாஸ்பூர் அருகே கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து 12-க்கும் அதிகமான ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், பல்வேறு வங்கிகளின் காசோலை புத்தகங்கள், 3 லேப் டாப்கள், டேப்லெட் மற்றும் ஸ்விப்ட் டிசையர் கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். சில மாதங்களுக்கு முன்புதான் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது. சிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் அனைவரையும் 6 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x