கேட்பரிஸ் நிறுவனத்துக்கு ரூ.88 கோடி அபராதம்

கேட்பரிஸ் நிறுவனத்துக்கு ரூ.88 கோடி அபராதம்
Updated on
1 min read

சர்வதேச உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான மாண்டெலஸ், இந்தியாவில் தனது துணை நிறுவனமான கேட்பரிஸ் இந்தியா விரிவாக்கத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதன் காரணமாக ரூ.88.50 கோடி (1.30 கோடி டாலர்) அபராதம் செலுத்த வேண்டும் என அமெரிக்க பங்குச் சந்தை பரிவர்த்தனை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இமாசலப் பிரதேசத்தில் விரிவாக்கத்துக்கான அனுமதி பெறுவதற்கு லஞ்சம் வழங்கியது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேட்பரிஸ் இந்தியா நிறுவனம் இமாச்சலப் பிரதேசத்தில் படி நகர ஆலையில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனுமதி பெறுவதற்காக சட்ட விரோதமான லஞ்சம் வழங்கியது. இந்த நடவடிக்கைக்காக 2009ம் ஆண்டில் வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் (Foreign Corrupt Practices Act (FCPA) கீழ் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ள அமெரிக்க பங்குச் சந்தை பரிவர்த் தனை அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் எதிர் காலத்தில் சட்ட விரோத நட வடிக்கைகளில் ஈடுபடாமலிருக் கவும் இந்த அபராதம் விதிக்கப் படுவதாக மாண்டலெஸ் நிறுவனத்துக்கு எதிராக தீர்ப் பளித்துள்ளது. இந்த அபராதத்தை அமெரிக்க கருவூலத்தின் பொது நிதியில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் செய்தி தொடர் பாளர், மாண்டலெஸ் நிறுவனம் இந்த உத்தரவை ஏற்றுக் கொள் வதாகவும், உத்தரவு கிடைத்ததும் இந்த தொகையை செலுத்தி வழக்கை முடித்துக் கொள்ள தயா ராக இருப்பதாகவும் கூறினார்.

மாண்டலெஸ் நிறுவனத்துக்கு எதிரான உத்தரவில், கேட்பரிஸ் நிறுவனம் அரசு அனுமதிகள் மற்றும் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளில் தடையின்மை சான்றிதழ் பெறுவதற்காக, விண்ணப்பங்களை தயார் செய்வதற்கு என பல்வேறு வகைகளிலும் 61.70 லட்ச ரூபாய் லஞ்சமாக வழங்கியுள்ளது என்று அமெரிக்க பங்குச் சந்தை பரிவர்த் தனை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த தொகையை கேட்பரிஸ் நிறுவனம் சில ஏஜெண்டுகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி யுள்ளது. இவர்கள் டைல்ஸ் மற்றும் மார்பிள் தொழிலில் உள்ள உள்ளூர் தொழிலதிபர்கள் ஆவர். இந்த தொகைக்கு வரி ரசீதுகள் எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது. இவர்களிடம் எந்த ஆவணங்களையும் பெறவில்லை என்பதுடன் எந்த ஒப்பந்தங்களையும் கேட்பரிஸ் இந்தியா மேற்கொள்ளவில்லை என்றும் அமெரிக்க பங்குச் சந்தை பரிவர்த்தனை அமைப்பு கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in