

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் விற்பனை 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் நிறுவனம் 1,36,962 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,23,034 கார்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு கார் விற்பனை 15.5 சதவீதம் அதிகரித்து 1,30,676 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்தில் 1,13,162 கார்களை விற்பனை செய்திருந்தது.
மாருதி நிறுவனம் வெளியிட் டுள்ள அறிக்கையில், சிறிய கார்களின் விற்பனை 18.1 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள் ளது. ஆல்டோ, வேகன் ஆர் கார்களை கடந்த மாதத்தில் 39,089 விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்தில் 33,105 கார்கள் விற்பனை செய்திருந்தது. காம்பக்ட் கார்கள் வரிசையில் ஸ்விப்ட், எஸ்டிலோ, டிசையர், பலெனோ கார்களின் விற்பனை 10.1 சதவீதம் அதிகரித்து 51,234 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் 46,554 கார்களை விற்பனை செய்திருந்தது.
நடுத்தர செடான் கார் விற்பனை 8.9 சதவீதம் சரிந்து 4,724 கார் விற்பனை செய்துள்ளது. எர்டிகா, எஸ்-கிராஸ், விடாரா பிரெஸா கார்ளின் விற்பனை 66.3 சதவீதம் அதிகரித்து 22,608 கார்களாக உள்ளது. கடந்த ஆண்டில் 13,596 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆம்னி, எக்கோ கார்களின் விற்பனை 3.5 சதவீதம் உயர்ந்து 12,593 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனம் 12,164 கார்களை விற் பனை செய்திருந்தது. நிறுவனத் தின் ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட 36.3 சதவீதம் சரிந்து 6,286 வாகனங்களக உள்ளது. இது கடந்த ஆண்டில் மே மாதத்தில் 6,286 வாகனங்களாக இருந்தது.
ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை 13% அதிகரித்துள்ளது. மே மாதத்தில் நிறுவனம் 11,278 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 9,954 கார்களை விற்பனை செய்துள் ளது. 498 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. நியூசிட்டி, மற்றும் டபிள்யூஆர்-வி கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி சட்டம் மற்றும் பருவ மழை சிறப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் காரணமாக வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் யோய்சிரோ யூனோ கூறினார்.