

விப்ரோ நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் இல்லை என நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனர்கள் பங்குகளை விற்க திட்டமிட்டிருப்பதாக காட்சி ஊடகங்களில் செய்தி வெளியானது. அதனை மறுத்து அசிம் பிரேம்ஜி பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறினார்.
நிறுவனத்தை மொத்தமாக விற்கவோ அல்லது பகுதி அளவு விற்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இதற்காக இன்வெஸ்ட்மென்ட் பேங்க் நிறுவனங்களை விப்ரோ தொடர்பு கொண்டிருக்கிறது என சிஎன்பிசி டிவி 18 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
`ஊடகங்களில் வெளியான இந்த செய்தியில் உண்மை யில்லை. பணியாளர்கள் வதந்தி களை நம்பவேண்டாம். கடந்த 50 ஆண்டுகளாக சிறிய தாவர எண்ணெய் நிறுவனமாக இருந்த விப்ரோ தற்போது பெரிய டெக் னாலஜி நிறுவனமாக உயர்ந்திருக் கிறது. ஐடி துறையின் வளர்ச்சி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விப்ரோவில் தொடர்ந்து பணி யாற்ற விரும்புகிறேன்’ என பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் அஸிம் பிரேம்ஜி தெரிவித்திருக்கிறார்.
விப்ரோ நிறுவனத்தில் அசிம் பிரேம்ஜி மற்றும் குடும்பத்துக்கு 73.25 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் 1.75 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த நிதி ஆண்டு வருமானம் ரூ.55,000 கோடியாகும்.