

சர்வதேச அளவில் பல லட்சம் குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை தொடர்பாக பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில் ஸ்டெம் (STEM) என்று சொல்லக் கூடிய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங் களின் முக்கியத்துவத்தை டிசிஎஸ் நன்கு அறிந்து வைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் திறன் மேம்பாடு, திறமைகளை ஊக்குவிப்பது போன்ற செயல்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலம் இந்த பாடங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் மிக முக்கியமான துறையாக ஸ்டெம் மாறியுள்ளது.
ஸ்டெம்-ஐ மேம்படுத்தும் வித மாக பல பள்ளிகளோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஸ்டெம் துறையில் ஆர்வம் உள்ள குழந்தை களுக்கு பயிற்சியளிக்கவும் அவர்களுக்கு இந்த துறையில் எதிர்காலத்தை உருவாக்கவும் முயற்சி செய்து வருகிறோம். இதேபோல் எண்ணம் உள்ள நிறுவனங்கள் மனிதர்களு டன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் ஆவலாக இருக்கிறோம். சர்வதேச அளவில் பல லட்சம் குழந்தைகளை இந்த துறையில் வல்லுநர்களாக உருவாக்க வேண்டும்.
டெக்னாலஜி துறையில் முன்னோடிகளாக இருக்கும் நாம் ஒரு மிக சிறப்பான எதிர்காலத்தை, மனித நேயம் மிக்க உலகத்தை உருவாக்க முடியும். எதிர்வரும் காலத்தில் டெக்னாலஜி துறையில் இண்டஸ்ட்ரியல் 4.0 விஷன் கற்றல் உட்பட மிகப் பெரிய தொழில்நுட்பங் களை நாம் உருவாக்க முடியும். புதிய தொழில்நுட்ப மையம் அடுத்த ஆண்டில் தயாராகி விடும். மேம்படுத்தப்பட்ட முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த தொழில்நுட்ப மையம் உதவும் என்று தெரிவித்தார்.