

10 வருடங்களுக்கு மேலாக டெல்லி யில் ஓடிக்கொண்டிருக்கும் டீசல் கார்களுக்கு தடைவிதிப்பதன் மூலம் டெல்லி காற்றின் தரம் எப்படி உயரும் என வியப்பாக இருக்கிறது என மாருதி சுசூகியின் தலைவர் ஆர்.சி.பார்கவா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இம்மாத தொடக்கத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் புதுடெல்லியில் பத்து வருடங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கும் டீசல் கார் களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், பதிவு எண்களை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் டெல்லி அரசிடம் கூறியது.
இது குறித்து ஆர்.சி.பார்கவா மேலும் கூறியதாவது: இந்த தடையால் 2 லட்சம் கார் உரிமை யாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். இதுவரை அவர்களுடைய சொத்தாக அறியப்பட்ட கார், இனி பயன்படாத பொருளாகிவிடும். இது எப்படி சரி என்று தெரியவில்லை.
டெல்லியின் காற்று மாசுபாடுக்கு டீசல் கார்களின் பங்கு வெறும் 2.2 சதவீதம் மட்டுமே என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு மேலான டீசல் கார் தடையால் டெல்லியில் எப்படி காற்று மாசுபாடு குறையும் என எனக்குத் தெரியவில்லை. இது இந்தத் துறையைப் பாதிக்கும்.
மற்ற நகரங்களை போலவே 2 லட்சம் டீசல் கார் உரிமையாளர்கள் டெல்லியில் உள்ளனர். அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு சட்டத்தின் மூலம் அவர்களின் சொத்து இனி பயன்படாத பொருளாக மாறிவிடும். இது எப்படி நியாயப்படுத்த முடியும் என்பதும் தெரியவில்லை. அவர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங் காமல் இனி இந்த கார்களை பயன் படுத்த முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால் நாங்கள் கார் விற்பனை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து விற்போம். பிரச்சினை அதுவல்ல. மாருதியின் தலைவராகவோ அல்லது கார் உற்பத்தி நிறுவனத் தின் தலைவராகவோ இதனை கூற வில்லை. டீசல் கார் இல்லை என் றால் பெட்ரோல் கார் வாங்கிக் கொள்வார்கள். இதனால் நிறுவனத் தின் வியாபாரம் பாதிக்கப்படாது. தொழிலை பற்றிய கவலையை விட, நாம் எப்படி செல்கிறோம் என்பது கவலையாக இருக்கிறது.
காற்றைத் தூய்மை படுத்துவதற் காக, அறிவியல் பூர்வமாக இல் லாமல், சம்பந்தப்படாத நபர்களை தண்டிப்பது குறித்து கவலையாக இருக்கிறது என்று மாருதி சுசூகியின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்தார்.
கடந்த ஜூலை 18-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார், டெல்லி போக்குவரத்து கழகத்துக்கு இது குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
புதுடெல்லியில் காற்று மாசுபாடு ஒரு முக்கிய பிரச்சினையாக இருக் கிறது. அதனால் 2000 சிசி-க்கும் மேலான டீசல் வாகனங்களை டெல் லியில் விற்பனை செய்ய ஏற்கெ னவே உச்ச நீதிமன்றம் தடை விதித் தது குறிப்பிடத்தக்கது.