

அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் பொழுதுபோக்கு நிறுவனமான நெட் பிளிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர். தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் உள்ளார். 1997-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
1991-ம் ஆண்டு பியூர் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். 1995-ம் ஆண்டிலேயே பொதுப் பங்கு வெளியிட்டவர். 1997-ம் ஆண்டில் ரேஷ்னல் சாஃப்ட்வேர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியவர்.
2011-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ளார்.
2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தவர்.
கேஐபிபி பவுண்டேஷன், பஹாரா இன்ஸ்ட்டியூட், ஹிஸ்பானிக் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களில் இயக்குநர் குழுவிலும் உள்ளார்.
போவ்டொய்ன் கல்லூரியில் பிஏ பட்டம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியலில் எம்எஸ்சிஎஸ் பட்டமும் பெற்றவர்.