

பால் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள குவாலிட்டி நிறுவனம் ரூ. 300 கோடி முதலீட்டில் விரிவாக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குவாலிட்டி நிறுவனத்துக்கு ஹரியாணா, பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 6 ஆலைகள் உள்ளன.
இந்நிறுவனம் நாளொன்றுக்கு 30 லட்சம் பாலை பதப்படுத்துகிறது. கடந்த நிதி ஆண்டில் (2012-13) இந்நிறுவன ரூ. 3,700 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பால் விற்பனையில் குவாலிட்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டெய்ரி பெஸ்ட் என்ற பிராண்ட் பெயரில் இந்நிறுவனம் நாளொன்றுக்கு 2.25 லட்சம் பாலை டெல்லி பகுதியில் விற்பனை செய்து வருகிறது. நாளொன்றுக்கு இந்நிறுவனம் 28 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது. இதில் 5 லட்சம் லிட்டர் பால் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. நேரடி குளிர்விப்பு கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக உள்ளது. இதை 90 ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.