பாரம்பரிய சின்னங்களை பறைசாற்ற கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர ரயில்வே திட்டம்

பாரம்பரிய சின்னங்களை பறைசாற்ற கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர ரயில்வே திட்டம்
Updated on
1 min read

இந்திய ரயில்வேத்துறை தனது பாரம்பரிய சின்னங்களை டிஜிட்டல் மயமாக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்விதம் டிஜிட்டல் மயமாக்கி வெளிநாட்டவர்களை ஈர்ப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற கூகுள் நிறுவனமும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. ரயில்வேத் துறையின் பாரம்பரிய சின்னங்களை டிஜிட்டல்மயமாக்கி சர்வதேச அள வில் ஆன்லைன் மூலம் அனைவரும் இலவசமாக பார்க்க வகை செய்யப் பட உள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தநர்.

ரயில்வேத்துறை வசம் அதிக எண்ணிக்கையிலான புராதான சின்னங்கள் குறிப்பாக பாலங்கள், நீராவி இன்ஜின், அருங்காட்சியகம் ஆகியன உள்ளன. இதை சர்வ தேச அளவில் அனைத்து வெளிநாட் டினரும் பார்க்கும் வசதியை ஏற்ப டுத்துவதே இதன் நோக்கமாகும்.

இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. தேசிய ரயில் அருங்காட்சியக மையம் (ஜிசிஐ) தற்போது ஒரு லாப நோக்கில் இல்லாத அமைப் பாக செயல்படுகிறது. இந்த மையம் கலாசார அமைப்பு மற்றும் புராதன சின்னங்களை ஆன்லைனில் வெளி யிட முயற்சி மேற்கொண்டுள்ளது.

பாரம்பரிய சின்னங்கள், நீராவி என்ஜின், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஆன்லைனில் வெளிவரும் போது அது சுற்றுலாப் பயணிகளை படிப்படியாக ஈர்ப்பதாக அமையும் என்று ரயில்வேத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அரசு அமைப்புகள் மற்றும் லாப நோக்கில் அல்லாத அமைப்பு களுடன் மட்டுமே ஜிசிஐ ஒப்பந்தம் செய்து வந்துள்ளது.

தற்போது ரயில் நிலை யங்களில் இலவச வைஃபை வசதி அளிப்பதற்காக ரயில்வே யுடன் கூகுள் இணைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in