

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.152 குறைந்தது. சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,801 ஆகவும் ஒரு பவுன் ரூ. 22,408 ஆகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் அதே விலையே நீடித்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை ஒரு கிராமுக்கு ரூ.19 குறைந்தது. இதனால் கிராம் விலை ரூ.2,782 ஆகவும் பவுன் விலை ரூ.22,256 ஆகவும் இருந்தது. பவுனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளி கிராம் விலை ரூ.47.70 ஆக இருந்தது. இது திங்கள்கிழமை ரூ.47.40 ஆக குறைந்தது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.44,615-ல் இருந்து ரூ.310 குறைந்து, ரூ.44,305 ஆக குறைந்தது.