பிஎஸ் 3 வாகனங்களுக்குத் தடை எதிரொலி: இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி

பிஎஸ் 3 வாகனங்களுக்குத் தடை எதிரொலி: இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி
Updated on
1 min read

பிஎஸ் 3 தகுதிச் சான்று இருக்கும் வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த தகுதி சான்று பெற்றிருக்கும் 6.71 லட்சம் வாகனங்கள் சந்தையில் இருக்கின்றன. அதனால் தள்ளுபடி விலையில் அந்த வாகனங்களை விற்க ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதிகபட்சம் ரூ.12,500 தள்ளுபடி வழங்குகின்றன.

ஹோண்டா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் பிஎஸ் 3 தகுதி சான்று பெற்றிருக்கும் அனைத்து வாகனங் களுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் நேற்று மாலையில் தள்ளுபடியை ரூ.22,000 வரை உயர்த்தியது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறு வனத்தின் டீலர்கள் கூற்றுபடி ஸ்கூட் டர்களுக்கு ரூ.12,500-ம், பிரீமியம் ரக இரு சக்கர வாகனங்களுக்கு 7,500 ரூபாயும், ஆரம்ப நிலை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வாகன இருப்பு இருக்கும் வரை அல்லது மார்ச் 31 வரை இந்த சலுகை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் டிவிஎஸ், சுசூகி மற்றும் யமாஹா ஆகிய நிறுவனங்களும் தள்ளுபடியை அறிவித்திருக் கின்றன. டிவிஎஸ் நிறுவனம் 3,000 ரூபாயும், யமஹா நிறுவனம் 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுசூகி நிறுவனம் 4,000 ரூபாய் தள்ளுபடி வழங்கி இருக்கிறது. தவிர இலவச காப்பீடு, ஹெல்மெட், உதரி பாகங்கள் என ஒவ்வொரு நிறுவனம் கூடுதல் சலுகைகளையும் வழங்கி இருக்கிறது.

இதுவரை இவ்வளவு தொகையை இரு சக்கர வாகனங் களுக்கு தள்ளுபடி வழங்கப்பட வில்லை என டீலர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, பிஎஸ் 3 வாகனங்களை விற்பதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் வழங்கப்படாததால், கைவசம் இருக்கும் வாகனங்களை விற்கும் நடவடிக்கையை எடுத்துவருகிறோம். தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களிடம் பேசி வருகிறோம். ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு உற்பத்தி நிறுவனங்களிடம் பேசி கைவசம் இருக்கும் வாகனங்களை என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வோம் என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in