Published : 12 Jun 2016 11:39 AM
Last Updated : 12 Jun 2016 11:39 AM

கருப்புப் பண விவரங்களை அளிக்க சட்டத்தை எளிமையாக்குகிறது சுவிஸ் அரசு

தங்கள் நாட்டில் பணம் போட்டுள்ளவர்கள் பற்றிய விவரத்தை அளிக்க ஸ்விட்சர் லாந்து முடிவு செய்துள்ளது. களவாடப்பட்ட அல்லது திருடு போன தகவல் என்ற அடிப்படையில் விவரம் கோரும் நாடுகளுக்கு தகவலை அளிக்க வகை செய்யும் திருத்தத்தை சுவிஸ் அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு சாதகம்

ஸ்விட்சர்லாந்தின் இந்த முடிவு இந்தியாவுக்கு சாதகமானதாகும்.திருடு போன தகவல் என்ற அடிப்படையில் சுவிஸ் அரசு அதிகாரிகள், இதுபற்றி விவரம் கோரும் நாடுகளுக்கு தகவலை அளிக்க முடியும். இதற்கு வழி செய்யும் பரிந்துரையை சுவிஸ் பெடரல் கவுன்சில் ஏற்றுள்ளது. ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளதை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வரும் வேளையில் சுவிஸ் அரசின் இந்த தகவல் மிகவும் சாதகமானதாகும்.

பிரதமர் நரேந்திர மோடியும், சுவிஸ் அதிபர் ஜோகன் ஷ்னெய்டர் அமானும் சந்தித்துப் பேசிய போது கருப்புப் பண விவகாரம் முக்கிய இடம் பெற்றது.

வழக்கமான நிர்வாக நடைமுறையின் கீழ், தகவல் கோரும் நாடுகளுக்கு இந்த விஷயத்தை அளிக்க முடிவு செய்துள்ளதாக சுவிஸ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல்கள் பெறுவது சுலபமல்ல

இருப்பினும் நிர்வாக ரீதியில் வெளியிலிருந்து இதுபோல திருடு போன தகவல்களைப் பெறுவது சுலபமானது அல்ல என்று தகவல் கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் பெடரல் கவுன்சில், இதுபோன்ற வரி நிர்வாக உதவி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா இந்த ஆண்டு தொடக்கத்தில் சுவிஸ்டர்லாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டது.

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவலைப் பெறுவது மிகவும் சிரமமானது. இதற்கேற்ப அந்நாட்டு வங்கி பாதுகாப்பு நடைமுறை விதிகள் சாதகமாக உள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து ஸ்விட்சர்லாந்தில் போட்டுள்ள கருப்புப் பணத்தை மீடக நடவடிக்கை எடுக்கின்றன. இதனால் இப்போது ஸ்விட்சர்லாந்து அரசுக்கு நெருக்குதல் அளிக்கின்றன. சர்வதேச நெருக்குதல் காரணமாக சுவிஸ் அரசும் விதிகளை தளர்த்த முன்வந்துள்ளது.

2013-ம் ஆண்டு பெடரல் கவுன்சில் நிர்வாக உதவி நடை முறைகளை எளிமையாக்குமாறு பரிந்துரைத்தது. அதன்படி திருடு போன தகவகளை எளிதாக பெற வகை செய்யலாம் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு பெரும்பாலானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இது நடைமுறைப்படுத்தப் படவில்லை.

இருப்பினும் தொடர்ந்து சர்வதேச அளவில் நெருக்குதல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இதுபோன்ற தகவல்களை அளிப்பது தங்கள் நாட்டு சட்டத்தின்படி விதி மீறலாகும் என சுவிஸ் அரசு கைவிரித்துவிட்டது. இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோன்ற கோரிக்கைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தது.

கடந்த மாதம் ஸ்விட்சர்லாந்து அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இதன்படி நாடுகளி டையே வரி சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்பதாகும்.

பிரதமர் மோடி, ஸ்விட்சர் லாந்தில் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருந்தபோது, கருப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் மோடி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக சுவிஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x