உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1,50,000 கோடி டாலர் முதலீடு தேவை: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1,50,000 கோடி டாலர் முதலீடு தேவை: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
Updated on
2 min read

அடுத்த 10 வருடங்களில் இந்தியா வின் உள்கட்டமைப்புத் திட்டங் களுக்கு 1,50,000 கோடி டாலர் (இந்திய மதிப்பில் 1,01,83,267 கோடி ரூபாய்) முதலீடு தேவைப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:

2019-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு 700 கிராமங்களை சாலை மூல மாக இணைக்க இருக்கிறது. இதன் மூலமாகத்தான் உள்கட்டமைப்பு இடைவெளியை களைய முடியும். அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நவீனமயமாக்கல் திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளி அதிகமாக இருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள மந்தநிலை யால் நாம் நிலையான வளர்ச்சியை நோக்கி செல்லவேண்டும். அதே சமயத்தில் நமது உள்கட்டமைப்பு வசதிகளையும் வலுப்படுத்த வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு இடைவெளியை நீக்க இந்தியாவிற்கு மட்டும் 1,50,000 கோடி டாலர் தேவைப்படுகிறது. மேலும் நம்மிடம் உள்ள கூடுதல் வளத்தை இதற்காக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உதாரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது நமக்கு சாதகம்.

இது போன்ற விஷயங்களை நமக்குச் சாதமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதுமட்டு மல்லாமல் அதிகமான பொது நிதியை உள்கட்டமைப்புத் திட்டங் களில் முதலீடு செய்ய வேண்டும்.

நெடுஞ்சாலைகளை பொறுத்த வரை இந்த வருடம் எங்களுடைய இலக்கு 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க வேண்டும். நமது ரயில்வே துறை 100 வருடங்கள் பழமையானது. மொத்தமாக ரயில்வே துறையை நவீனமாக்க வேண்டும். மத்திய அரசும் ரயில் நிலையங்களை வர்த்தக மையமாக மாற்ற தனியார் துறை பங்களிப்பை எதிர்பார்த்துள்ளது.

அதிக விமான நிலையங்கள், துறைமுகங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மின் உற் பத்தியை அதிகமாக்கவும் குறிப் பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகமாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதையெல்லாம் மேற்கொள் வதற்கு பொது நிதியை பயன் படுத்துவதுதான் தொடக்கப்புள்ளி என்பதை நாங்கள் உணர்ந்திருக் கிறோம். பொது நிதியை இந்த திட்டங்களில் முதலீடு செய்து பின்பு செயல்படுத்தும்போது அதிகமான தனியார் முதலீடுகள் வரும்.

அதே சமயத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி போன்ற ஏராளமான வளர்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிகமாக நிதி வழங்குகின்றன. ஏனெனில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் நீண்ட காலத்துக்கு வருமானத்தை தரக்கூடியவை. மேலும் மத்திய அரசு, இந்திய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி என்ற ஒன்றை நிறுவியிருக்கிறது. இதில் மத்திய அரசு மிக குறைந்த பங்குகளை வைத்திருக்கும்.

ஒரு புதிய சோதனையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். இது நிச்சயமாக வெற்றியடையும் என நான் நம்புகிறேன். அடுத்த பத்தாண் டுகளில் இந்தியா உள்கட்டமைப்பு இடைவெளியை முழுவதுமாக நீக்கும். அதுமட்டுமல்லாமல் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏழ்மை யிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றையும் நிறைவேற்றும்.

வளர்ந்து வரும் பொருளாதாரத் திலிருந்து வளர்ந்த பொருளாதார பிரிவிற்கு இந்தியா கண்டிப்பாக செல்லும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட நாட் டிற்கு இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in