விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை தவிர்க்க வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கருத்து

விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை தவிர்க்க வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கருத்து
Updated on
1 min read

விவசாய கடன் தள்ளுபடி வாக் குறுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நிதி கொள்கை அறிவிப்பு கூட்டத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் உத்தர பிரதேச மாநிலத்தில் முத லமைச்சர் யோகி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற் றது. இதில் விவசாயிகள் கடன் சுமார் ரூ.36,359 கோடியை தள்ளு படி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை யும் மோடியின் வாக்குறுதியையும் நிறைவேற்றும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.2 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.

இந்த கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உர்ஜித் படேல் கூறியதாவது: கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். இது கடன் கொடுக்கும் கலாச்சாரத்தை பாதிக்கும், மேலும் கடனை திருப்பி செலுத்துவதிலும் வாங்குவதிலும் ஒழுங்கற்ற தன்மைக்கு வழிவகுக்கும். விவசாயக் கடன் தள்ளுபடி நேர்மையாக கடனை திருப்பிச் செலுத்துவோரையும் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும். இது தீங்கான செயல். இந்த செயல் வரி செலுத்துவோர்களின் பணத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பானது கடன் கலாச்சாரத்தை பாதிக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கடந்த மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக் கது. மேலும் புதிதாக கடன் வாங்கு பவர்களும் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து கொண்டிருப்பர். கடன் களை திருப்பி செலுத்துவது குறை யும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in