Last Updated : 16 Mar, 2017 10:29 AM

 

Published : 16 Mar 2017 10:29 AM
Last Updated : 16 Mar 2017 10:29 AM

பாஜக வெற்றியால் சீர்திருத்த நடவடிக்கைகள் எளிதாகும்: ஆலோசனை நிறுவனமான மூடி’ஸ் கணிப்பு

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சீர்திருத் தங்கள் தொடர்வது எளிதாகியுள்ளது. மேலும் பிற மாநில தேர்தல் களிலும் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது என்று முதலீட் டாளர்கள் ஆலோசனை நிறுவன மான மூடிஸ் கூறியுள்ளது. இந்த வெற்றி மூலம் மாநிலங்களவை யில் உறுப்பினர்களின் எண் ணிக்கையை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு இந்தியாவின் பெரும்பான் மையான மக்கள் ஆதரவு நிலை யையே எடுத்துள்ளனர். இதன் வெளிப்பாடாக 2017 தேர்தல் முடிவு களில் ஆளும் பிஜேபி அரசுக்கு வெற்றி பெற்றுள்ளது இதனால் சீர் திருத்தங்களை எளிதாக நிறை வேற்றும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போது ஆளும் அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ள நிலையில், மாநிலங்களவை யில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறது. மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் விரைவில் உயரும் வாய்ப்புகள் உள்ளது. எனினும் இந்த மாற்றங்கள் உடனடியாக நிகழாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து கூறிய மூடிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், மூத்த அதிகாரியுமான வில்லியம் பாஸ்டர், தேர்தல் முடிவு களால் கிடைத்த பலன் மத்திய அரசுக்கு உடனடியாக கிடைக்காது. அடுத்த ஆண்டில் சில மாநிலங் களவை உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்த பிறகுதான் மாநிலங்களவையில் மாற்றம் நிகழும் என்று கூறினார்.

எனினும் மத்திய அரசின் சீர்திருத் தங்களால் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் சீர்திருத்தங் கள் மற்றும் மாற்றங்களை செயல் படுத்துவதற்கான அனுமதிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க சீர்த்திருத்த நடவடிக்கை, ஆளும் அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளது.

பண மதிப்பு நீக்கத்தால் 2016 ஆண்டு இறுதியில் நெருக்கடி கள் ஏற்பட்டாலும் பிஜேபி அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அடுத்து 2018-ம் ஆண்டில் 69 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரபிரதேசத்தின் 10 இடங்கள், உத்தரகாண்ட் மாநிலத்துக்கான ஒரு இடத்துக்கும் மறுதேர்தல் நடைபெற உள்ளது. இதன்மூலம் மாநிலங்களையில் தங்களது எண்ணிக்கையை பிஜேபி அதிகரித்துக் கொள்ள முடியும்.

மாநிலங்களைவையில் முக்கிய சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் காலதாமதமாகி வரும்நிலையில், நிலம் கையகப்படுத்தல் மசோதா, தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வாங்குவதில் சாதகமான சூழல் உருவாகும்.

பாஜக ஆளும் மாநிலங்களாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஏற்கெனவே இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x