

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எட்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ஒரு டாலர் 61.99 ரூபாய் வரை சென்றது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இந்த விலைக்கு செல்வது இப்போதுதான். வர்த்தகத்தின் முடிவில் 22 பைசா சரிந்து 61.96 ரூபாயில் முடிவடைந்தது. வங்கிகள் மற்றும் எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்தன் காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்தது.
பங்குச்சந்தைகள் சரிவு
இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தின் போது ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகமாக இருந்தால் சரிவுடன் முடிந்தன.