

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவி வந்த வர்த்தக ஒத்து ழைப்பு ஒப்பந்தத்துக்கு (டிஎப்ஏ) உலக வர்த்தக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்தியா தெரிவித்த கருத்துகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
உணவு மானியத்துக்கு ஒதுக்கீடு செய்வதில் ஏற்கெனவே பாலி மாநாட்டில் ஒப்புக் கொண்டபடி இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதைய நிலையே தொட ருவது என்ற இந்தியாவின் நிபந்தனை ஏற்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) உயர் அமைப்பான பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டன.
மக்களுக்கு வழங்குவதற்காக அரசே உணவு தானியத்தை சேமிக்கக் கூடாது என்று டபிள்யூடிஓ விதிகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் உணவுக்கு அளிக்கப்படும் மானியம் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று குறிப்பிடப்படுகிறது.
ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை. பாலியில் ஒப்புக் கொண்டபடி இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை 2017-ம் ஆண்டு வரை அபராதம் விதிக்கக் கூடாது என்ற நிபந்தனை ஏற்கப்பட்டுள்ளது.