

சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் பேட்டரி பிரச்சினை காரணமாக வெடித்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. அதனை தொடர்ந்து இந்த போனை விமானத்தில் பயன்படுத்த சிங்க ப்பூர் ஏர்லைன்ஸ் தடைவிதித்திருக் கிறது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த குவான்டாஸ், அபுதாபியை சேர்ந்த எதியாட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஜப் பானை சேர்ந்த விமான நிறுவனங் கள் இது போல பெரிய திரை கொண்ட போன்களை விமானத் தில் இயக்குவது மற்றும் சார்ஜ் ஏற்றவும் தடை விதித்திருக்கிறது.
சாம்சங் நிறுவனம் எஸ்-7 மாடலின் விற்பனையை நிறுத்தி யுள்ளதுடன், ஏற்கெனவே விநியோகம் செய்திருந்த 25 லட்சம் போன்களை திரும்ப பெறவும் திட்டமிட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங் களும் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்களை விமானத்தில் பயன் படுத்த தடைவிதித்துள்ளன.