Published : 09 May 2017 10:18 AM
Last Updated : 09 May 2017 10:18 AM

ரூ.450 கோடி வருவாய் ஈட்ட காமராஜர் துறைமுகம் திட்டம்: துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார் தகவல்

காமராஜர் துறைமுகம் இந்த ஆண்டு ரூ.450 கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, காமராஜர் துறை முகத்தின் தலைவர் எம்.ஏ.பாஸ் கராச்சார் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அரசின் கப்பல் துறையின் கீழ் இயங்கும் காமராஜர் துறைமுகம் நாட்டின் 12-வது துறை முகமாகும். தொடக்கத்தில் தமிழ் நாடு மின்வாரியத்தின் பயன்பாட் டுக்காக நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக மட்டும் பணிகளை மேற்கொண்டு வந்த இத்துறைமுகம் தற்போது திரவப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், பொதுச் சரக்குகள் என ஆண்டுக்கு 32 மில்லி யன் டன் சரக்குகளை கையாளும் திறன் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் ஏற்றுமதி, இறக்குமதி தேவையைச் சமாளிக்க காமராஜர் துறைமுகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, கூடுதல் முனையங் களுக்கான ஒப்பந்தம், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு மேலும் இரண்டு நிலக்கரி படுகைகள் கட்டுவது, சரக்குப் பெட்டக முனையம், தற்போதுள்ள இரும்புத்தாது முனையத்தை மாற்றியமைப்பது மற்றும் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைப்பது என ஆண்டுக்கு 54 மில்லியன் டன் சரக்குகளை கூடுதலாகக் கையாளும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இப்பணிகள் நிறைவடைந்தால் காமராஜர் துறைமுகம் ஆண்டுக்கு 86 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் அளவுக்கு உயரும்.

கடந்த 2016-17-ம் ஆண்டில் காமராஜர் துறைமுகம் கையாண்ட சரக்குகள் 30.02 மில்லியன் டன்கள் ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டில் 32.21 மில்லியன் டன் களாக இருந்தது. முந்தைய ஆண் டுடன் ஒப்பிடுகையில் 6.80 சதவீதம் குறைவு. இந்த வீழ்ச்சிக்குக் காரணம் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது நிலக்கரி இறக்குமதியைக் குறைத்துக் கொண்டது. இருப்பினும் திரவப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் கையாளுதல் முறையே 4.51 சதவீதம் மற்றும் 5.36 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.7 ஆயிரத்து 300 கோடி செலவில் துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறன் 32 மில்லியன் டன்களில் இருந்து 86 மில்லியன் டன்களாக உயர்த்துவதற்கு பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ரூ.450 கோடி அள வுக்கு வருவாய் ஈட்ட திட்டமிடப் பட்டுள்ளது.

துறைமுகத்தின் சரக்குப் பெட்ட கத்தினை மேம்படுத்துவதற்காக அதானி கன்டெய்னர் டெர்மினல் நிறுவனத்துடன் இணைந்து 1.4 மில்லியன் திறன் கொண்ட பெட்டக முனையம் ரூ.1,270 கோடியில் உருவாக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்ட முனையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் 25-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

துறைமுகத்தின் உள்ளே 20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 0.25 மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிப்பதற்கான பணி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். இதைத் தவிர, காற்றாலை மூலம் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாஸ்கராச்சார் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x