

டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த இன்ஜின் உதிரிபாக தயாரிப்பு நிறு வனமான டைட்டன் எக்ஸ் நிறு வனத்தை கையகப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனம் இது தொடர் பாக நேற்று வெளியிட்ட செய்தி யில், சர்வதேச அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வதற்காகவும், இன்ஜின் எரிபொருள் சேமிப்பு மற்றும் குளிர்விப்பான் தொழில் நுட்பத்தில் முன்னிலையில் இருக்கவும் இந்த கையகப்படுத்தல் உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
டாடா ஆட்டோகாம் சிஸ்டம்ஸ் தலைவர் பிரவீண் காட்லி பேசும் போது, இது சர்வதேச சந்தையில் சிறந்த வளர்ச்சியை எட்டுவதற்கான திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வாகனத்தை ஓட்டுவதற்கான புதிய தீர்வுகளை இதன் மூலம் கொண்டுவர முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஆட்டோமொபைல் சேவைத் துறையில் சர்வதேச தரத்திலான பொருட்களை தயாரிப்பதற்கான நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் அளித்துள்ளது. மேலும் தயாரிப் புகள் மற்றும் சேவையின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள் வோம் என்றும் கூறியுள்ளார். டாடா ஆட்டோகாம் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அஜய் டான்டன் பேசுகையில், இந்தியாவுக்கு வெளியே வர்த்தக மற்றும் பயணி கள் வாகன சந்தையை வலுவான தாக மாற்றிக்கொள்ள நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றார்.
டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ், டாடா குழுமத்தால் தொடங்கப் பட்ட நிறுவனமாகும். ஆட்டோ மொபைல் சார்ந்த உதிரிபாகங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.