Peak-load pricing என்றால் என்ன?

Peak-load pricing என்றால் என்ன?
Updated on
1 min read

Peak-load pricing

சேவை நிறுவனங்களில் peak-load pricing முறை பயன்படுத்தப்படும். தொலைபேசி சேவை விற்கும் நிறுவனங்கள் பகல் நேரங்களில் தொலைபேசி சேவைக்கு அதிக தேவை இருப்பதையும், இரவு நேரங்களில் குறைவான தேவை இருப்பதையும் அறியும். ஆனால் அவர்கள் இயந்திரங்கள் இவ்விரு நேரங்களிலும் ஒரே அளவு சேவையைக் கொடுக்கக்கூடியவை. பகல் நேரத்தில் எல்லாரும் ஒரே நேரத்தில் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தும் போது எல்லாருக்கும் ஒரே அளவு சேவையைக் கொடுக்க முடியாது. எனவே, பகல் நேரங்களில் தொலைபேசி சேவைக்கு அதிக கட்டணத்தையும், இரவு நேரங்களில் குறைந்த கட்டணமும் வசூலிக்கின்றன. இதனால் பகல் நேரத்தில் அதிக வருவாய் பெறுவதுடன், சேவையின் தேவையைக் குறைக்கமுடியும். இரவு நேரங்களில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதால் பலரை இரவு சேவையை பயன்படுத்தவைக்கமுடியும், வருவாயும் பெருகும். ஒரு சேவைக்கு அதிக தேவை உள்ள நேரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பது peak-load pricing எனப்படும்.

சுற்றுலா தளங்களில் பயணிகள் அதிகமாக வரும் காலங்களில் விடுதியில் அதிக வாடகை வாங்குவதும் இம்முறையில் தான்.

Two-part pricing

ஒரு பொருள் அல்லது சேவையின் உற்பத்திச் செலவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று, நிலையான செலவு. அதாவது நிலம், இயந்திரம் போன்ற பொருட்களை ஒரு முறை வாங்கினால், உற்பத்தி அளவு மாறும்போது இந்த பொருட்களின் மீதான செலவு மாறாது. இரண்டு, மாறும் செலவு, அதாவது, உற்பத்தி அளவு மாறும்போது இச்செலவும் மாறும், உதாரணமாக உள்ளீட்டு பொருட்கள் அல்லது உழைப்பாளர்கள் கூலியை கூறலாம், உற்பத்தி அதிகமாகும் போது உள்ளீட்டு பொருட்களை அதிகமாக வாங்கவேண்டும், அதேபோல் கூலியும் அதிகமாகக் கொடுக்கவேண்டும். பொருள் அல்லது சேவையின் விலையும் இவ்வாறு இரண்டு பகுதிகளாக வசூலிப்பது two-part pricing. தொலைபேசி சேவையை வாங்கும் போது நிலையான செலவுக்காக ஒரு தொகையை முன்பணமாக வாங்குவதும், பின்னர் தொலைபேசி சேவையை பயன்படுத்துவதற்கேற்ப மற்றொரு சேவை கட்டணம் வாங்குவது. இதில் சேவை பயன்பாடு அதிகமாகும்போது சேவை கட்டணமும் அதிகமாகும், ஆனால் முன்பணம் அதிகமாகாது. இவ்வாறு ஒரு பொருள் அல்லது சேவைக்கு இரண்டு வெவ்வேறு விலைகளைக் கொடுப்பது two-part pricing ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in