

உள்நாட்டு இரும்பு பயன்பாட்டை அதிகரிக்க விரைவில் புதிய உருக்கு கொள்கைகளை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதன் மூலம் அரசின் அனைத்து கட்டுமான திட்டங்களுக்கும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் இரும்பை பயன்படுத்த வழி ஏற்படும்.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை அமைச்சகங் களுக்கு இடையிலான ஆலோச னையில் விரைவில் ஈடுபட உள்ளது என்று மத்திய உருக்கு துறை செயலர் அருணா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கொள்கைகள் மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உருக்குக்கு முன்னுரிமை கொடுக்கவும், மதிப்பு கூட்டு நடவடிக்கைகளை இந்தியாவிலேயே மேற்கொள்ள வும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது என்றும் கூறினார்.
இந்த கொள்கை அமல்படுத் தப்பட்டால் அரசு கட்டுமான திட்டங்கள் மற்றும் உள்கட்ட மைப்பு திட்டங்கள் அனைத் திலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு பயன்படுத்தப்படும் என்று உருக்கு துறை அமைச்சர் சவுதாரி பிரேந்தர் சிங் ஏற்கெனவே நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.