ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.8,046 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.8,046 கோடி
Updated on
1 min read

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ.8,046 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.7,167 கோடியாக இருந்து. நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

2016-17-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் ரூ.29,901 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18.8 சதவீதம் அதிகமாகும். நிறுவனத் தின் நான்காம் காலாண்டு நிகர வருமானம் 45.2 சதவீதம் உயர்ந்து ரூ.92,889 கோடியாக உயர்ந்துள் ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.63,954 கோடியாக இருந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் பங்குச் சந்தை வர்த்தக நேரத்துக்குப் பிறகு வெளியானாலும், இந்நிறுவன பங்குகள் முன்தினத்தை விட 1.14 சதவீதம் உயர்ந்து ரூ.1,415.70-க்கு வர்த்தகமானது.

ஜியோ நஷ்டம் ரூ.22 கோடி

தொலைத் தொடர்புத் துறையில் சலுகைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாதங்களில் ரூ.22.50 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.முந்தைய ஆண்டில் நிறுவன நஷ்டம் ரூ.7.46 கோடியாக இருந்தது.

இதேபோல நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.2.25 கோடியாக முன்னர் இருந்தது. அது தற்போது (6 மாதங்களில்) ரூ.54 லட்சமாக சரிந்துவிட்டது. இந்நிறுவனத் தின் ஜியோ பிரைம் திட்டத்தில் 7 கோடி பேர் இணைந்துள்ள தாக நிறுவனம் தெரிவித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in