இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 23% உயர்வு

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 23% உயர்வு
Updated on
1 min read

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2016-17 நிதியாண்டில் 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த மாக கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி மதிப்பு 578 கோடி டாலராக உள்ளது. சர்வதேச அளவில் உறைய வைக்கப்பட்ட மீன்களின் தேவை அதிகமான காரணத்தினால் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கை: கடந்த 2016-17ம் நிதியாண்டில் 11,34,948 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டில் 9,45,892 டன் கடல் உணவு மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது குறிப் பிடத்தக்கது. உறைய வைக் கப்பட்ட இறால் மற்றும் மீன் களின் தேவை சர்வதேச சந்தை யில் அதிகரித்த காரணத்தினால் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித் துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிடமிருந்து அதிகளவில் கடல் உணவை இறக்குமதி செய்து வருகின்றன. கடந்த நிதியாண்டில் ஐரோப் பிய சந்தையில் கடல் உணவின் தேவை அதிகரித்ததால் ஐரோப் பிய ஒன்றியத்திலும் இந்திய கடல் உணவுகள் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கடல் உணவு ஏற்றுமதியில் உறைய வைக்கப்பட்ட இறால் கள் முதலிடத்தில் உள்ளன. மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் இவற்றின் பங்கு 38.28 சதவீதம். கடந்த நிதியாண்டில் உறைய வைக்கப்பட்ட இறால் களின் ஏற்றுமதி 16.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

உறைய வைக்கப்பட்ட மீன் கள் கடல் உணவு ஏற்றுமதியில் 2-வது இடத்தில் உள்ளன. கடந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதியில் உறைய வைக்கப் பட்ட மீன்களின் பங்கு 26.15 சதவீதமாக உள்ளது.அமெரிக்கா 29.98% கடல் உணவு களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in