Published : 21 Jul 2016 11:20 AM
Last Updated : 21 Jul 2016 11:20 AM

குறைந்த விலை வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தை மாநிலங்கள் குறைக்க வேண்டும்: முதலமைச்சர்களுக்கு வெங்கய்ய நாயுடு கடிதம்

குறைந்த விலையில் வீடுகள் இருக்க வேண்டும் என்றால் மாநில அரசுகள் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பட்ஜெட் வீடு திட்டங்களை உயர்த்த முடியும் என்று மத்திய அரசு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். ஆரம்பத்தில் ஆவணங்களை பராமரிக்க முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது மாநிலங்களின் முக்கிய வருவாயாக முத்திரைத்தாள் கட்டணம் இருக்கிறது என்று நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடந்த அசோ சேம் நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாது.

நகர்ப்புறங்களில் உள்ள ஏழை களுக்கு வீடு வழங்குவதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ னாவின் கீழ் 26 மாநிலங்களில் 2,508 திட்டங்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன. முத்திரைத்தாள் கட்டணம் 10 சதவீதமாக சில மாநி லங்களில் இருக்கிறது. இதன் கார ணமாக வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

அதனால் இதுகுறித்து அனைத்து மாநில முதலமைச்சர் களுக்கும் விரிவாக கடிதம் எழுதி யுள்ளேன். சில மாநில முதலமைச் சர்கள் சாதகமாக கருத்து தெரிவித் துள்ளனர். தவிர இந்த துறையை (வீடு) மேம்படுத்த பல நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். இந்த துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் இன்னும் அதிகம் உள்ளன.

இந்தத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனில் நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்திருக் கிறார். டெல்லியில் தொடங்கப்பட் டுள்ளது. டெல்லி அரசும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. விண்ணப் பம் மற்றும் அனுமதி ஆன்லைனில் வழங்கப்படுவதுதான் திட்டம். என்னுடைய கணிப்பில் 60 நாட்களுக்குள் அனைத்து அனுமதி களும் வழங்கப்படும். இதே திட்டத்தை மும்பையிலும் தொடங்கி இருக்கிறோம்.

வெளிப்படைத் தன்மையை உயர்த்த அனைத்து மாநகராட் சிகளும் ஆன்லைன் முறையை பின்பற்ற மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் ஊழல் குறையும். காலதாமதம், தேவை யில்லாத கட்டணங்கள் ஆகியவை யும் குறையும். இதனால் நுகர்வோர்களுக்கு சாதகமாகும் என வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

அடுத்த வாரத்தில் ஜிஎஸ்டி

மாநிலங்களவையில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா அடுத்தவாரம் நிறைவேறும் என நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேகவால் தெரிவித்தார். அசோசேம் நிகழ்ச்சியில் பேசிய இவர் மேலும் கூறியதாவது.

ஜிஎஸ்டி வரி அளவை சட்டமாக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை நடைமுறை சாத்தியம் அற்றது. ஆனால் கருத்தொற்றுமையை ஏற்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. உத்திரப் பிரதேசம், ஒடிஷா, மேற்குவங்கம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்கள் ஜிஎஸ்டி மசோதாவை விரைவில் நிறைவேற வேண்டும் என்று நினைக்கின்றன. அதனால் மாநிலங்களவையில் இந்த மசோதா அடுத்த வாரத்தில் நிறைவேறும்.

காங்கிரஸ் ஜிஎஸ்டி மசோ தாவை வடிவமைத்த போது, வரி அளவை சட்டமாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இப் போது தோன்றிய எண்ணம் என்ப தால் விரைவில் ஒரு தீர்வு கிடைக் கும் என மேகவால் கூறினார்.

புதுடெல்லியில் அசோசேம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு `இந்தியாவில் குறைந்த விலை வீடுகளுக்கான நிதி’ என்னும் மலரை வெளியிடும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x