

கொரியாவைச் சேர்ந்த ஹூண் டாய் மோட்டார் இந்தியா நிறுவ னம் அடுத்த நான்கு ஆண்டு களில் 8 புதிய மாடல் கார் களை அறிமுகப்படுத்தத் திட்ட மிட்டுள்ளது. இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே. கூ தெரிவித்தார்.
நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், நடப்பாண் டில் இரட்டை இலக்க வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்ப்பதாகக் கூறி னார். ஆட்டோமொபைல் துறை யின் வளர்ச்சி ஒற்றை இலக் கத்தில் இருந்தபோதிலும் தங்கள் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 8 புதிய மாடல் கார் களும் 2 மேம்படுத்தப்பட்ட ரக கார் களும் அறிமுகம் செய்யத் திட்ட மிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ் போவில் ஹைபிரிட் மாடலான இக்னிஸ் காட்சிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், இதைத் தொடர்ந்து புதிய மாடல்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப் படும் என்றார்.
சான்ட்ரோ காரை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் உள் ளதா என்று கேட்டதற்கு, அதற்குப் பதிலாக குடும்பத்தினருக்கேற்ற புதிய மாடல் அறிமுகம் செய்யும் திட்டமுள்ளதாகக் கூறினார்.
காம்பாக்ட் கார் பிரிவில் ஹூண்டாய் நிறுவனம் 51 சதவீத சந்தையைப் பிடித்துள்ளதாக கூறிய அவர், நிறுவனத்தின் ஐ10, ஐ20 உள்ளிட்ட ரகங்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது என்றார். 4 மீட்டருக்கும் குறை வான நீளத்தில் எஸ்யுவி-யை அறிமுகம் செய்யும் திட்டமும் இதில் அடங்கும் என்ரார்.
சர்வதேச அளவில் ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்புகளுக்கு சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த சந்தையாக இந்தியா திகழ்வ தாகக் கூறினார்.
அடுத்த 4 ஆண்டுகளில் மொத்தம் 8 புதிய மாடல் கார்களும் 2 மேம்படுத்தப்பட்ட ரக கார் களும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.