

அக்டோபர் மாதத்துக்கான நாட்டின் மொத்த பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இது 6.46 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், பணவீக்கம் இந்தளவு உயர்ந்துள்ளது முதல் முறையாகும். கடைசியாக, 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணவீக்கம் 7.32 சதவீதமாக இருந்தது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர பட்டியலில்: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் பணவீக்கம் இந்தளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு முறை நடைபெற்ற நிதி கொள்கை சீராய்வு கூட்டத்தில், ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.