

கடந்த ஜூன் 15-ம் தேதி நிலவரப்படி வருமான வரி வசூல் 26.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,01,024 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வரி வசூல் ரூ.80,075 கோடியாக இருந்தது.
மெட்ரோ பகுதியில் மும்பை யில் வருமான வரி வசூல் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.9,614 கோடி அளவுக்கு இந்த பகுதியில் வசூல் இருந்தது. தற்போது 138% உயர்ந்து ரூ.22,884 கோடி அளவுக்கு வருமான வரி வசூலாகி இருக்கிறது. மும்பை யைத் தொடர்ந்து புதுடெல்லியில் அதிக வரி கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8,334 கோடி வசூலாகி இருந்தது. தற்போது 38 சதவீதம் உயர்ந்து ரூ.11,582 கோடியாக வசூலாகி இருக்கிறது.
கொல்கத்தாவில் 7 சதவீதம் உயர்ந்து ரூ.4,084 கோடியும், பெங்களூருவில் 6.8 சதவீதம் உயர்ந்து ரூ.14,923 கோடியும் வருமான வரி வசூலாகி இருக்கிறது. ஆனால் சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருமான வரி வசூல் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.8,986 கோடியில் இருந்து தற்போது ரூ.8,591 கோடியாக குறைந்திருக்கிறது.
பூணேயில் 19 சதவீதமும், தானேவில் 11சதவீதமும் வருமான வரி வசூல் உயர்ந்திருக்கிறது.