இவரைத் தெரியுமா?- சர் மார்ட்டின் சோரேல்

இவரைத் தெரியுமா?-  சர் மார்ட்டின் சோரேல்
Updated on
1 min read

இங்கிலாந்தைச் சேர்ந்த விளம்பர நிறுவனமான டபிள்யூபிபி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

இவரின் மொத்த சொத்து மதிப்பு 28 கோடி டாலர்.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

அமெரிக்க பங்குச்சந்தை நிறுவனமான நாஸ்டாக்கில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

உலக பொருளாதார கூட்டமைப்பில் சர்வதேச தொழில் அமைப்பு பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆர்கானிக் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்வி நிறுவனத்தில் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

மெரில் லின்ஞ் நிறுவனத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in