

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ.6,000 கோடியை முதலீடு செய்யத் திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், மஹாராஷ்டிரா மாநி லத்தின் நாசிக் மற்றும் இகத் புரியில் அமைந்துள்ள ஆலைக ளில் ரூ.1,500 கோடியை விரி வாக்கத்துக்காகவும், சக்கன் ஆலையின் அடுத்த கட்ட விரிவாக் கத்துக்காகவும் ரூ.4,500 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக கூறி யுள்ளது. நாசிக் மற்றும் இகத்புரி ஆலைகளின் உற்பத்தி திறனை 50,000 வாகனங்கள் என்கிற நிலையிலிருந்து 2,00,000 வாக னங்களாக அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது.
இந்த முதலீடு மூலம் நாசிக் ஆலையை மிகப் பெரிய நவீன ஆலையாக தரம் உயர்ந்த உள் ளோம் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா கூறியுள்ளார்.
நாசிக் ஆலையை நவீன மயமாக்கும் திட்டம் படிப்படியாக மேற்கொள்ளப்படும். எங்களது புதிய யு321 என்கிற வாகனத்தை தயாரிக்கவும் உள்ளோம் என்று குறிப்பிட்டார். இகத்புரி மற்றும் நாசிக் இரண்டு ஆலைக்கும் சேர்த்தே முதலீடு செய்கிறோம் என்று குறிப்பிட்டார்.
நாசிக் ஆலை வாகனங்கள் உற் பத்திக்கும், இகத்புரி ஆலையில் தயாரிப்பு மற்றும் இன்ஜின் விநியோகத்துக்கும் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. சுமார் ரூ.2,500 கோடி இவ்விதம் முதலீடுகள் செய்யப் படும் என்றார்.
நிறுவனம் ஏற்கெனவே அறி வித்திருந்தபடி சக்கன் ஆலை விரிவாக்கத்துக்கு ரூ.4,500 கோடி முதலீடு செய்கிறது. இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் முதற்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ளன என்றும் கோயங்கா கூறினார்.
நிறுவனத்தின் அறிக்கைபடி மூன்றாவது காலாண்டில் வரிக்கு பிந்தையp லாபம் 33.29 சதவீதம் உயர்ந்து ரூ. 1,112 கோடியை ஈட்டி யுள்ளது.