

அரசு அமைத்துள்ள அதிகரமளிக்கப்பட்ட மையம், 6 சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர் அரவிந்த் மாயாராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சாலை திட்டங்களின் மதிப்பு ரூ. 2,778.72 கோடியாகும்.
இந்த சாலை திட்டங்கள் அனைத்தும் தனியார், அரசு பங்களிப்பு அடிப்படையில் (பிபிபி) மேற்கொள்ளப்பட உள்ளன. அதிகாரமளிக்கப்பட்ட மையத்தின் 52-வது கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றுது. இதில் இந்தத் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செவ்வாய்க் கிழமை நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகார்-பிகானீர் தேசிய நெடுஞ்சாலை, கர்நாடக மாநிலத்தில் நெலமங்களா முதல் சிக்கபல்லபுரா வரையிலான மாநில நெடுஞ்சாலை, நாகபுரி – உம்ரெத் – சந்திராபூர் இடையே நான்கு வழிப் பாதை அமைப்பது ஆகியன இத்திட்டப் பணிகளாகும். இது தவிர ஐந்து சாலை திட்டங்களுக்கு கொள்கை ரீதியில் இக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.