பங்குச்சந்தையில் புதிய உச்சம்: 22,162 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்

பங்குச்சந்தையில் புதிய உச்சம்: 22,162 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்
Updated on
1 min read

வர்த்தக தொடக்கத்தில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 107.31 புள்ளிகள் உயர்ந்து 22,162.52 புள்ளிகளாகவும் நிப்டி 6,600 புள்ளிகளாகவும் இருந்தன.

22,162.52 புள்ளிகள் என்ற நிலையை அடைந்து சென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தேசத்தின் பொருளாதார நிலை ஏற்றம் கண்டுவருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகள் செய்து வருவதால் பங்குச்சந்தையில் ஏறுமுகம் நிலவுவதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 60.24 என்ற நிலையில் உள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கான ஏற்றம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in