

சஹாரா குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான சஹாரா பிரைம் சிட்டி நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.1.43 கோடி வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிறுவனத் தில் வீடு வாங்குவதற்காக பணத்தை அளித்த வாடிக்கை யாளருக்கு வீடு அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
சஹாரா பிரைம் சிட்டி நிறுவனத்தின் சார்பில் நாக்பூர் அருகே கட்டப்பட்டு வந்த கட்டு மான திட்டத்தில் வீடு வாங்கு வதற்காக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சாதனா என்பவர் ரூ.1,43,56,000 செலுத்தியிருந் தார். இதற்காக வீடு ஒதுக்கீடு கடிதத்தை நிறுவனம் 2009-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அளித்துள்ளது. இந்த கடிதத்தின்படி 38 மாதங்களில், 2012 மே 2ம் தேதிக்குள் வீடு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறுவனம் திட்டமிட்டபடி வீட்டை கட்டி முடிக்கவில்லை.
இதனால் தேசிய நுகர்வோர் குறை தீர்பாணையத்தில் சஹாரா பிரைம் சிட்டிக்கு எதிராக சாதனா வழக்கு தொடுத்தார். வீட்டுக்கான முழு தொகையை அளித்த பின்னரும் வீட்டை கட்டி முடிக்கவில்லை என புகார் அளித் தார். வீட்டை அளிக்க தாமதப் படுத்துவதற்காக எந்த ஆதாரமும் அளிக்கவில்லை என்கிற சூழலில் இந்த வழக்கை தொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை செய்த தீர்ப்பாயம் இந்த வீட்டை கட்டி முடிக்கும் வரை காத் திருக்க கட்டாயப்படுத்த முடியது. நிறுவனம் உடனடியாக வாடிக்கையாளரிடம் பெற்ற பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என தீர்பாணையத்தின் நீதிபதி வி.கே ஜெயின் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு செலவுக்காக பாதிக்கப்பட்ட வருக்கு ரூ.10,000 அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.