

சர்வதேச சிகரெட் நிறுவனங் களான ஐடிசி மற்றும் காட்பிரே பிலிப்ஸ் ஆகிய நிறுவனங்கள் சிகரெட் அட்டை மீது 85 சதவீத எச்சரிக்கை புகைப்பட விளம்பரங்களை அச்சிட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் இந்த விதி கட்டாயம் என்று அறிவித்ததால் எச்சரிக்கை வாசகங்களை அச்சிட் டதாக நிறுவனங்கள் தெரிவித்தன.
முன்பு சிகரெட் அட்டைகளில் குறைந்த சதவீத எச்சரிக்கை வாசகங்கள் இருந்தன. இப்போது 85 சதவீத புகைப்பட எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்த துறை மீது பழைய அச்சிடப்பட்ட சிகரெட் அட்டைகள் விற்பதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் புதிய சிகரெட் அட்டைகள் சந்தையில் விற்கப்படுவதாக சிகரெட் நிறுவனங்களின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.