

ஆன்லைன் மூலமாக பணியாளர் களைத் தேர்வு செய்யும் முறை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்வது கடந்த ஆண்டை விட 19 சதவீதமாக உயர்ந் துள்ளது.
மனிதவள மேம்பாட்டு நிறுவன மான மான்ஸ்டர் டாட் காம் நடத் திய ஆய்வில் தகவல் தொழில் நுட்ப துறை, கல்வித்துறை ஆகிய வற்றில் அதிகமான பணியாளர்கள் ஆன்லைன் மூலமாக தேர்ந் தெடுக்கப்படுவதாக தெரிய வந்து ள்ளது. இந்த ஆய்வு முடிவை மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீடு என்ற தலைப்பில் மான்ஸ்டர் நிறுவனம் வெளியிட் டுள்ளது. இதில் ஆன்லைன் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்வது 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தை விட தற்போது 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆன்லைன் மூலமாக தேர்வு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக மான்ஸ்டர் டாட் காம் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் மோடி தெரிவித்துள்ளார்.